Polling Personal Format
2014 நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடுத்த, பள்ளி வாரியாக ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய, விண்ணப்பங்களை பெரும் பணி தீவிரமாக நடக்கிறது.
தமிழகத்தில், 2014 ஏப்ரல் மாதத்தில் லோக்சபா
தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும், மாவட்டம் வாரியாக, அனைத்து
ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடக்கிறது. ஓட்டுச்சாவடியில் கல்வித்துறை
பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும்,
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் விபரங்களை, மாவட்ட
தேர்தல் பிரிவு கல்வித்துறையிடம் கேட்டுள்ளது. இதற்காக பள்ளி வாரியாக
விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, அந்த விண்ணப்பத்தில், கேட்கப்பட்டுள்ள
மொத்தம், 19 விபரங்களை பூர்த்தி செய்து, மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட
தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க, கலெக்டர் சண்முகம்
உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்த அலுவலகத்தில் இதற்கென தனியாக தேர்தல்
பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கல்வி மாவட்டத்தில், 20 அரசு
உயர்நிலைப்பள்ளிகள், 36 அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஒரு நகரவை
உயர்நிலைப்பள்ளி, மூன்று நகரவை மேல்நிலைப்பள்ளி, நிதியுதவி உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தலா எட்டு, ஆறு சுயநிதி மேல்நிலைப்பள்ளிகள்
என இந்த விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யும் விண்ணப்பத்துடன்,
சம்பந்தப்பட்ட ஆசிரியரின் ஃபோட்டோ ஒட்டியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அனைத்தும் செப்., 23ம் தேதிக்குள்
சம்பந்தப்பட்ட கல்வித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க கலெக்டர் சண்முகம்
உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment