பல்வேறு சீர்திருத்தம் : தேர்வுத் துறை இயக்குனராக, தேவராஜன் பதவி ஏற்றதில் இருந்து, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத் தேர்வுக்குப் பின், தேர்வு விவரங்களிலும், பெயர்களிலும் பிழைகள் இருப்பதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மாணவர், தேர்வுத் துறைக்கு வருவதை முற்றிலும் தடுக்கும் வகையில், தேர்வுத் துறை இயக்குனர், புதிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மாநிலம் முழுவதும், அனைத்து வகை பள்ளிகளுக்கும், மாணவ, மாணவியர் விவரங்கள் அடங்கிய படிவத்தை, தேர்வுத் துறை அனுப்பி உள்ளது. மாணவர் பெயர், தாய், தந்தை பெயர், தலைப்பு எழுத்து, பிறந்த தேதி, பள்ளி பெயர், முகவரி, பெற்றோரின் மொபைல் எண், மாணவர் படிக்கும், "குரூப்' விவரம், பாடங்களின் பெயர் என, 11 வகையான விவரங்கள், அந்த படிவத்தில் கேட்கப்பட்டன. இதை பூர்த்தி செய்து, மாணவர், பெற்றோர், வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் என, நான்கு பேரும் கையெழுத்திட வேண்டும் என, இயக்குனர் கூறியுள்ளார். இந்த விவரங்கள் அடிப்படையில் தான், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும் என்றும், படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுக்குப் பதிலாக, வேறு திருத்தம் கோரி, தேர்வுக்குப் பின் வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிழை இல்லாத சான்றிதழ் : இந்த நடவடிக்கையால், பிழையில்லாத, மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவர்களுக்கு வழங்க முடியும் என, தேர்வுத் துறை கருதுகிறது. தற்போது, இந்த படிவங்கள் அனைத்தையும், பூர்த்தி செய்து, பள்ளிகளில், மாணவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, அதில் உள்ள விவரங்களை, வரும், 23ம் தேதியில் இருந்து, தேர்வுத் துறை இணையதளத்தில், "அப்லோட்' செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அக்., 15ம் தேதிக்குள், இந்த பணிகள் முடிந்துவிடும். அதன்பின், தேர்வெழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறித்த விவரங்கள், தெளிவாகக் கிடைக்கும். அதனடிப்படையில், தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்ய, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment