பத்தாம் வகுப்பு, இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது.
கடந்த
மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் பலர்,
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில் முதல் கட்டமாக, குறிப்பிட்ட
மாணவர்களுக்கு, ஏற்கனவே மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில்,
இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவுகள், நாளை காலை, 10:30 மணிக்கு
வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மதிப்பெண்களில்
மாற்றம் உள்ள மாணவர்கள், பழைய மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 16ம் தேதி
முதல், 18ம் தேதி வரை, சென்னையில் உள்ள தேர்வுத் துறை இயக்குனர்
அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்
கொள்ளலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான, வங்கி சலானை, கண்டிப்பாக கொடுக்க வேண்டும் எனவும், தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment