scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 29, 2013

”தான்” பெற்ற வெற்றி என எண்ணாது “ நாம்” பெற்ற வெற்றி என பரிசை பகிர்ந்த அதிகாரி

கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட பெண் அதிகாரி. ஆசிரியர்குடும்பம் வாத்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
கல்பனா சாவ்லா விருது ரூ.5 லட்சம் பரிசை ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்ட பெண் அதிகாரி************************************************************

 குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை தாசில்தாராக இருப்பவர் சுகிபிரேமலா. இவர் சுமார் 15 மாதங்கள் விளவங்கோடு தாலுகா வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்தார். அப்போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 107 டன் ரேஷன் அரிசி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 50 வாகனங்கள், 20 ஆயிரம் லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய், 1500 கிலோ வெடி பொருட்கள் ஆகியவற்றை அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தார்.சுகிபிரேமலாவின் நடவடிக்கைகளை பாராட்டி, சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கல்பனா சாவ்லா விருதை வழங்கி பராட்டினார். அத்துடன் தங்க பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் வழங்கினார். தனது அதிரடி நடவடிக்கைகளுக்கு ஆய்வாளர் ஜோதிஸ்குமார், அலுவலக ஜீப் டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் முழு ஒத்துழைப்பு அளித்ததாக அப்போதே சுகிபிரேமலா தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் சுகிபிரேமலா முதல்வர் பரிசாக வழங்கிய ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை ஆர்ஐ ஜோதிஸ்குமாருக்கும், ரூ.1 லட்சத்தை அலுவலக ஜீப் டிரைவர் ஜாண்பிரைட்க்கும் பகிர்ந்தளித்தார். இதுகுறித்து ஜோதிஷ்குமார், டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் கூறுகையில், Ôஅரிசி கடத்தல் தடுப்பு ரோந்து செல்வதானாலும் சரி, கடத்தல் வாகனங்களை விரட்டி பிடிக்கும் சவாலான பணியாக இருந்தாலும் சரி அதிகாரி சுகிபிரேமலா அஞ்சியதில்லை. கடத்தல் வாகனங்களை பிடித்து பறிமுதல் செய்யும் போதெல்லாம் அதை எங்களது கடமையாக நினைத்து தான் செய்து வந்தோம். இந்நிலையில் அவருக்கு அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி பாராட்டி பரிசு தொகை அளித்தது. அதை அவர் எங்களுக்கும் பகிர்ந்து தந்தது இதுவரையிலும் வேறு எந்த அதிகாரியும் செய்யாத ஒன்றாகும் என அவர்கள் கூறினர்.
குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை தாசில்தாராக இருப்பவர் சுகிபிரேமலா. இவர் சுமார் 15 மாதங்கள் விளவங்கோடு தாலுகா வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்தார். அப்போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 107 டன் ரேஷன் அரிசி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 50 வாகனங்கள், 20 ஆயிரம் லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய், 1500 கிலோ வெடி பொருட்கள் ஆகியவற்றை அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தார்.சுகிபிரேமலாவின் நடவடிக்கைகளை பாராட்டி, சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கல்பனா சாவ்லா விருதை வழங்கி பராட்டினார்.
அத்துடன் தங்க பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் வழங்கினார். தனது அதிரடி நடவடிக்கைகளுக்கு ஆய்வாளர் ஜோதிஸ்குமார், அலுவலக ஜீப் டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் முழு ஒத்துழைப்பு அளித்ததாக அப்போதே சுகிபிரேமலா தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் சுகிபிரேமலா முதல்வர் பரிசாக வழங்கிய ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை ஆர்ஐ ஜோதிஸ்குமாருக்கும், ரூ.1 லட்சத்தை அலுவலக ஜீப் டிரைவர் ஜாண்பிரைட்க்கும் பகிர்ந்தளித்தார். இதுகுறித்து ஜோதிஷ்குமார், டிரைவர் ஜாண்பிரைட் ஆகியோர் கூறுகையில், Ôஅரிசி கடத்தல் தடுப்பு ரோந்து செல்வதானாலும் சரி, கடத்தல் வாகனங்களை விரட்டி பிடிக்கும் சவாலான பணியாக இருந்தாலும் சரி அதிகாரி சுகிபிரேமலா அஞ்சியதில்லை. கடத்தல் வாகனங்களை பிடித்து பறிமுதல் செய்யும் போதெல்லாம் அதை எங்களது கடமையாக நினைத்து தான் செய்து வந்தோம். இந்நிலையில் அவருக்கு அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி பாராட்டி பரிசு தொகை அளித்தது. அதை அவர் எங்களுக்கும் பகிர்ந்து தந்தது இதுவரையிலும் வேறு எந்த அதிகாரியும் செய்யாத ஒன்றாகும் என அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment