ஊத்துக்குளி ஒன்றிய
அளவிலான சதுரங்கப்போட்டி 11 வயதுக்கு கீழ் மற்றும் 14 வயதுக்கு கீழ் என இரு பிரிவுகளாக
ஊத்துக்குளி இரயிலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் ஊத்துக்குளி ஒன்றிய திருமண
மண்டபத்திலும் இன்று 31.08.2013 காலை 10 மணிக்கு தொடங்கியது.இதில் ஊத்துக்குளி ஒன்றியத்தை
சேர்ந்த 80 பள்ளிகளிலிருந்து 340 மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். சதுரங்கப்போட்டியினை
ஊத்துக்குளி ஒன்றியப் பெருந்தலைவர் திரு.C.D.ரவிச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதில் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.ஆ.பூங்கோதை, கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி
அலுவலர் திருமதி.பி.முஸ்ராக்பேகம்,சுண்டக்காம்பாளையம் பள்ளி தலைமையாசிரியர் திரு.சு.காளியப்பன்
மற்றும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியை
திரு.வாரணவாசி,திரு.தண்டபானி ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்தினர். எங்கள் பள்ளி மாணவர் க.தினேஷ் மற்றும் க.பிரியதர்ஷினி ஆகியோர் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்றனர். இதில் வெற்றி பெற்ற அனைவரும் எதிர்வரும் 07.09.2013 அன்று கல்விமாவட்ட அளவில் விளையாட உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஆசிரியர்குடும்பம் பாராட்டுகிறது.
11 வயதுக்கு கீழ்
(ஆண்கள்) வெற்றி பெற்றோர்:
தரம்
|
மாணவர்
பெயர்
|
பள்ளி
|
I
|
க.தினேஷ்
|
ஊ.ஒ.ந.பள்ளி,சுண்டக்காம்பாளையம்
|
II
|
க.மனோஜ்
|
ஊ.ஒ.ந.பள்ளி,கஸ்தூரிபாளையம்
|
III
|
அ.சுபாஷ்
|
ஊ.ஒ.தொ.பள்ளி,சரவணபுரம்
|
11 வயதுக்கு கீழ்
(பெண்கள்) வெற்றி பெற்றோர்:
தரம்
|
மாணவர்
பெயர்
|
பள்ளி
|
I
|
க.பிரியதர்ஷினி
|
ஊ.ஒ.ந.பள்ளி,சுண்டக்காம்பாளையம்
|
II
|
வே.ஹேமாபாரதி
|
ஊ.ஒ.தொ.பள்ளி,பூலாங்குலம்
|
III
|
அ.தேவதர்ஷினி
|
கொங்கு மெட்ரிக் பள்ளி,ஊத்துக்குளி
|
14 வயதுக்கு கீழ்
(ஆண்கள்) வெற்றி பெற்றோர்:
தரம்
|
மாணவர்
பெயர்
|
பள்ளி
|
I
|
மு.திவாகரன்
|
ஊ.ஒ.ந.பள்ளி,கருமஞ்சிரை
|
II
|
து.பிரசாந்த்
|
ஊ.ஒ.ந.பள்ளி,ஊத்துக்குளி
இரயிலடி
|
III
|
ர.ஞானமூர்த்தி
|
ஊ.ஒ.ந.பள்ளி,16-வேலம்பாளையம்
|
14 வயதுக்கு கீழ்
(பெண்கள்) வெற்றி பெற்றோர்:
தரம்
|
மாணவர்
பெயர்
|
பள்ளி
|
I
|
அ.ரேணுகா
|
ஊ.ஒ.ந.பள்ளி,கோவிந்தம்பாளையம்
|
II
|
ர.பிரியா
|
ஊ.ஒ.ந.பள்ளி,கோவிந்தம்பாளையம்
|
III
|
சு.ஜோதிமணி
|
ஊ.ஒ.ந.பள்ளி,கஸ்தூரிபாளையம்
|
No comments:
Post a Comment