சிபிஎஸ்இ மாணவர்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் தன்னுடைய சுய விவரங்களை ஆன்லைனில் பதிவு
செய்யும் வசதியை சிபிஎஸ்இ வாரியம் கொண்டு வந்துள்ளது.அதன்படி,
இக்கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ., பள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்பு
படிக்கும் மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும்
வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு சமயத்தில் தங்களின்
விவரங்களை சிபிஎஸ்இ வாரியத்திற்கு அனுப்ப காத்திருக்க தேவையில்லை.மாணவர்கள்
படிக்கும் பள்ளியில் இருந்தே தங்களுடைய விவரங்களை கல்வி வாரியத்திற்கு
அனுப்பலாம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சிரமத்தை போக்குவதற்கு, இந்த
வசதியாக சிபிஎஸ்இ வாரியம் ஏற்படுத்தியுள்ளது.ஆன்லைனில் பதிவு செய்யும்
மாணவர்கள் www.cbseacademic.in என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment