பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் B.Ed பயில நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை.
முதுநிலையில், பொருளாதாரம், வணிகவியில், மனையியல், அரசியல், சமூகப்பணி, சமூகவியல், உளவியல், தர்க்கம், இந்திய கலாச்சாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் இடஒதுக்கீட்டு கொள்கை மற்றும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறைகள்:
பாரதிதாசன் பல்கலைக் கழகம் நடத்த உள்ள இரண்டாண்டுகள் B.Ed படிப்பில் சேர விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்.
www.bdu.ac.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது இயக்குநர், தொலைநிலைக் கல்வி இயக்ககம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், பல்கலைப் பேரூர் வளாகம், திருச்சி - 620 024 என்ற முகவரிக்கு நேரில் சென்றும் பெறலாம். அல்லது பாரதிதாசன் பல்கலைக் கழக சேர்க்கை மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், CDE, Bharathidasan University, Trichy என்ற பெயரில் 500 ரூபாய்க்கு வரைவோலை எடுத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறும். நுழைவுத் தேர்வுகள் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.
No comments:
Post a Comment