குரூப்-4, பணியிடங்களுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வு, செப்.,4, 5
தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. தேர்வாணையத்தின்
அறிவிப்பு: கடந்த, 2012ல் நடந்த குரூப்-4தேர்வு மூலம், இளநிலை உதவியாளர்,
நில அளவர், வரைவாளர் போன்ற பதவிகளுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு
செய்யப்பட்டனர்.இன்னும், 516 காலிப் பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன.
நான்காவது கட்ட கலந்தாய்வு மூலம், இந்த காலி பணியிடங்கள்
நிரப்பப்படும்.செப்., 4, 5 தேதிகளில், தேர்வாணைய அலுவலகத்தில், காலை, 8:30
மணி முதல் கலந்தாய்வு நடக்கும். இதற்கு அழைக்கப்பட்டுள்ள
விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள், எந்த தேதியில் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற
விவரங்கள், தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்,
அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இட்ட இரண்டு, "செட்' ஜெராக்ஸ்
பிரதிகள் ஆகியவற்றை, கலந்தாய்வுக்கு வரும் போது, கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, தேர்வாணையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment