முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தையட்டி தமிழக அரசு சார்பில்
364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நல்லாசிரியர்
விருது ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை
உள்ளடக்கியது ஆகும்.
2013-ம் ஆண்டுக்கான
தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக
ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியல் பெறப்பட்டு உள்ளது. அரசு பள்ளி
ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள்
ஆகிய அனைத்து வகையான ஆசிரியர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களின் பட்டியல் 27-ந் தேதி
இறுதிசெய்யப்படுகிறது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர்
5-ந்தேதி சென்னை சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவ கல்லூரி
மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர் விருது
வழங்கப்படும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.
No comments:
Post a Comment