மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள்ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய வேண்டிய சார்நிலை அலுவலகங்கள், பார்வையிட வேண்டிய பள்ளிகள் எண்ணிக்கையில் குறைந்தபட்ச இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும். மாதத்திற்கு குறைந்தபட்சம் 2 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும். 2 அலுவலகங்களை பார்வையிட வேண்டும். செப்டம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் 8 பள்ளிகளும், இதர மாதங்களில் 12 பள்ளிகளும் பார்வையிட வேண்டும்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஒரு கண்காணிப்பாளர்,இரண்டு உதவியாளர் கொண்ட குழு ஆண்டாய்வுசெய்ய வேண்டிய உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்குஇரண்டு அல்லது மூன்று முறை சென்று அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட பள்ளி ஆய்வுகள் சார்ந்த கோப்புகள், தமிழக அரசு அறிவித்துள்ள பல வகையான நலத்திட்டங்கள்,மாணவர்களுக்கு சென்றடைந்தது சார்பான விபரங்கள் ஆகியவை குறித்து ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆண்டாய்வு தினங்களில் கடைசி நாளில் சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்று பணியாளர்கள் தயாரித்துள்ள ஆய்வறிக்கை அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.பள்ளி ஆய்வின்போது பள்ளிகளில் குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது அமர்ந்து அனைத்து கூறுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுடன் உரையாடி கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு சென்றுவிட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளில் கட்டுமான வசதிகள், கழிப்பறைகள், அனைத்தும் போதுமானதாக உள்ளதா என்பதையும், கழிப்பறைகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment