scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

July 31, 2013

கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு துவங்கும் தேதி அறிவிப்பு:

கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு துவங்கும் தேதி அறிவிப்பு:


ஆகஸ்ட் முதல் வாரத்தில் கால்நடை மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி தொடங்கும்
என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில்
கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்புகளான பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.எச்., பி.எஃப்.எஸ்.சி., பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம்), பி.டெக். (கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதில் பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச். படிப்புகளில் மொத்தமுள்ள 280 இடங்களில் 238 இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இதுபோல் பி.எஃப்.எஸ்.சி. படிப்பில் மொத்தமுள்ள 40 இடங்களில் 34 இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறும். மீதமுள்ள இடங்கள் இந்திய கால்நடை மருத்துவக் கழகம் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள படிப்புகளில் மொத்தமுள்ள இடங்களுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
நன்றி: கல்வி விகடன்

No comments:

Post a Comment