6வது ஊதிய கமிஷன் அறிவிக்கப்பட்டத்திலிருந்தே எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பதை பார்ப்போம்.
நடுவன் அரசுக்கு பரிந்துரை செய்த ஊதியக் குழு கமிட்டி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ துறையில் செவிலியர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதிய நிர்ணயங்கள் செய்தல் வேண்டும் ஏனெனில் இவை இரண்டும் சேவையை
அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை என பரிந்துறை செய்தது. எனவே மத்திய அரசு அன்றைய அடிப்படை ஊதியமான 4500 x பெருக்கு
விகிதமான 1.86 ஆல் பெருக்க கிடைத்த தொகையான ரூ.8370ஐ அடிப்படை ஊதியமாக வைக்காமல் ரூ.9300 ஐ அடிப்படை ஆக வைத்து கிரேடு ஊதியமாக 4200 ஐ சேர்த்து ஒரு இடைநிலை ஆசிரியரின் அடிப்படை ஊதியம் ஆக ரூ13500 ஐ அறிவித்தது. எள்முனையளவும் குறையாது மத்திய அரசின் பரிந்துறைகளை அறிவிப்போம் என அறிவித்த அன்றைய தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியதே எள்முனையளவு தான் என்பது நாம் பெற்ற முதல் ஏமாற்றம். ஆம். அன்று இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்டது 5200 –
20200 + தர ஊதியம் 2800 ஆக அடிப்படை ஊதியம் ரூ 8000/-. ஆனால் அன்று இடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையிலே பெற்று வந்த ஊதியம் ரூ4500 + ரூ2250
= ரூ 6750/- வளரூதியங்கள்
இல்லாமல். பெற வேண்டியது ரூ.8370/-. இதில் எதிலும் நமக்கு வழங்காமல் ரூ8000/ மட்டும்
நமக்கு வழங்கி, முதல் முறையாக இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விடவும் குறைவான ஊதியத்தை வழங்கிய முதல் ஊதியக்குழு எனும் பெருமையை தட்டிச் சென்றது. பின்னர் ஆசிரிய சங்கங்களின் பொறுப்பாளர்கள் இந்த முரண்பாடுகளை சுட்டி காட்டி பேசிய பொழுது, மத்திய அரசு வழங்கிய 9300 எனும் முதல் நிலையை வழங்காமல், பெருக்கு விகிதத்தின் படி கிடைக்கப்பெற்ற ரூ 8370/ மட்டும்
அடிப்படையாக அனுமதித்து, கிரேடு சம்பளத்தில் எவ்வித மாற்றத்தையும் அனுமதிக்கவில்லை. ஆக மத்திய அரசு அனுமதித்த ஊதியத்தில் முதல் நிலையில் 830ம், தர ஊதியத்தில் 1400 ஆக மொத்தம் ரூ2230 01.06.2006ல் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு 01.06.2009க்கு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் 5200 + 2800 = ரூ 8000/- மட்டுமே நிர்ணயம் செய்து , நியமனத்தின் போது 01.06.2009க்கு முன், 10.06.09 க்கு பின் எனும் இரு வேறு நிலைகளை இடைநிலை ஆசிரியர் சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் அனைத்து சங்கங்களும் இணைந்து மாநிலந் தழுவிய அளவில் நடத்திய போராட்டங்களுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.500 சிறப்பு படியாக வழங்கப்பட்டது. பின்னர் இந்த இது 01.01.2011 முதல் ரூ 750/ ஆக தனிப்பட்ட ஊதியமாக அனுமதிக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வு ஆணையானது பட்டதாரி / தொடக்கப்பள்ளி ஆசிரிராக பதவி உயர்வின் போது, 01.01.2011க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்கள், 01.01.2011க்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்கள் எனும் இரு வேறு நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த 750யும் பெறுவதில் தான் எத்தனை சிரமங்கள். ஒரு சில மாவட்டங்களில் அரசாணையின்படி அனுமதிக்கப்படும் நிகழ்வும், பல மாவட்டங்களில் முடியாது 750ஐ அனுமத்தித்தால் அதிக சம்பளம் கணக்கு வருகிறது என்று அங்கலாய்ப்பு வேற! ஏற்கனவே அரைகுறையாக அனுமதிக்கப்பட்டதில் பெறுவதற்குள் அடுத்த பதவிவுயர்வும், சம்பளக் கமிஷனும் வந்து விடும் போல் உள்ளது. அரசாணைகளை பொறுத்தமட்டில் INTENSION OF THE READER IS THE DECISION
OF THE G.O.
HANG HIM, NOT
LEAVE HIM என்ற ஒரே வாக்கியத்திற்கு அவனை தூக்கிலிடு விட்டு விடாதே!!
அவனை தூக்கிலிடாதே விட்டுவிடு HANG HIM NOT, LEAVE HIM
என முரண்பாடாக இருவேறு பொருள் கொள்வதுண்டு. அது போல்
ALLOW PP750, NOT
LEAVE IT, என்பது ALLOW PP750 NOT, LEAVE IT என பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. என்று தீரும் எனத் தெரியவில்லை .இந்த நிலையில் ஓரேயொரு கலங்கரை விளக்கமாக கண்ணுக்கு தெரிந்த மூவர் குழு அறிக்கையும் வெளிவந்து நமக்கு இழைக்கப்பட்ட அநீதியை நியாயப்படுத்தியுள்ளது கூட நமக்கு வேதனையை தரவில்லை. டிப்ளமோ படிப்புகளுக்கு தர ஊதியமாக ரூ.4200 அனுமதிக்கப்பட்டாலும்,
இடைநிலை ஆசிரியப்படிப்பிற்கான டிப்ளமோவிற்கு மட்டும் ரூ2800 என்பது வழங்கப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம் இல்லாமல் யாராட்டமும் வென்றதில்லை! இதற்கு முன் நாம் பெற்ற சலுகைகளும் உரிமைகளும் நாம் போராடி பெற்றவையே! சுதந்திரம் கூட சும்மா கிடைக்கவில்லை. நினைத்து பார்த்து நமது இயக்கங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வடிவம் கொடுப்போம்! தோள் கொடுப்போம்! பல பட்டங்களையும், டிப்ளமோ படிப்புகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியப் படிப்பிற்கான அடிப்படை ஊதியத்தை வரப் போகும் சமுதாயத்துக்கு பெற்றுத் தருவோம்
சில இடங்களில் ஆங்கில சொற்கள் தமிழாக்கம் செய்யப்படாததால் கருத்து புரிய வில்லை.இடுகைக்கு நன்றி.கே.பி ரக்ஷித்.திமலை
ReplyDelete