scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label TNTET. Show all posts
Showing posts with label TNTET. Show all posts

July 07, 2014

TNTET- PAPER 2 (GRADUATE TEACHER) previous year Q & A

TET- PAPER 1 (SECONDARY GRADE) previous year Q & A

TNTET:20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்பு,இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான பட்டியலை கல்வித் துறை வெளியிடும்-Dinakaran News

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், பல்வேறுகுளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட டிஇடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து இட ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகையை அரசு அறிவித்தது. இதன்மூலம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியானது. ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே வெயிட்டேஜ் மதிப்பெண் முறை, விடைகளில் குளறுபடி உள்ளிட்டவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி புதிய வெயிட்டேஜ் முறை அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான விடை களை எதிர்த்து தொடரப்பட்ட 70க்கும் அதிகமான மனுக்கள் மீது உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில் டிஆர்பி வெளியிட்ட விடைகள் சரியானவை என தெரிவித்துள்ளதன் மூலம் தேர்வு பட்டியலைவெளியிட தடை நீங்கியது. எனவே புதிய அரசாணை அடிப்படையில் விரைவில் தேர்வு பட்டியலை வெளியிட டிஆர்பி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. 72 ஆயிரம் பேர் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடன் இருந்தாலும் முதல் கட்டமாக 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான பட்டியலை கல்வித் துறை வெளியிடும் என்று தெரிகிறது.

July 06, 2014

அடுத்த TET-அக்டோபர் மாதம் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நீதி மன்றம் நேற்று அதிரடியாக TET தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்ததால் TRB  தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது .ஆகையால் மிக விரைவில் இந்தாண்டுக்கான(2014)ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த திட்டம் வகுத்துள்ளது .அக்டோபர் மாதம் தேர்வு நடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.அடுத்த ஆசிரியர் தேர்வில்லாவது எந்த இடத்துக்கும் தாமதம் ஆகாத வகையில் நடக்கும் என்று எதிர்ப்பார்போம். 

தகவல் -திரு.ரெக்ஸ்.

July 05, 2014

டி.இ.டி., தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு:வழக்குகள் மீதான தீர்வால் டி.ஆர்.பி., சுறுசுறுப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வில், இதுவரை, இறுதி பட்டியல் வெளியாகவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), தேர்வு தொடர்பாகவும், இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வு தொடர்பாகவும், 70க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான வழக்கு, முக்கியமானதாக இருந்தது.டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60 மதிப்பெண்ணுக்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40 மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' முறையில் கணக்கிடப்பட்டது. இதனால், அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறி, வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், பழைய முறையை ரத்து செய்து, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்க, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். எந்த முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கலாம் என, தன் உத்தரவில், உதாரணத்துடன் சுட்டிக் காட்டினார்.அதன்படி, தேர்வர் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும், மே 30ம் தேதி,
பிறப்பிக்கப்பட்டது. இது, டி.இ.டி., பிரச்னையில், ஒரு தெளிவை ஏற்படுத்தியது.இந்நிலையில், தேர்வு விடைகளை எதிர்த்து தொடரப்பட்ட, 70க்கும் அதிகமான மனுக்கள் மீது, நீதிபதி நாகமுத்து, இந்த வாரத்தில் உத்தரவுகள் பிறப்பித்தார்.இதன் காரணமாக, டி.இ.டி., தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும், முடிவுக்கு வந்துள்ளன.இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:விடைகள் குறித்து, புதிய உத்தரவு எதுவும் எங்களுக்கு பிறப்பிக்கவில்லை. 'டி.ஆர்.பி., வெளியிட்ட விடைகள் சரியானவை' என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே, தேர்வு பட்டியலை வெளியிட, இனி, எங்களுக்கு எந்த தடையும் கிடையாது.ஆசிரியர் தேர்வுக்கான, புதிய அரசாணையின் அடிப்படையில், விரைவில், தேர்வு பட்டியலை வெளியிடுவோம். அதற்கான பணிகளை, இப்போதே துவக்கி உள்ளோம்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

July 02, 2014

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853
ஆங்கிலம் - 10716
கணிதம் - 9074
தாவரவியல் - 295
வேதியியல் - 2667
விலங்கியல் - 405
இயற்பியல் - 2337
வரலாறு - 6211
புவியியல் - 526
மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் : 42084

June 24, 2014

TNTET 12ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது:

கடந்த ஆண்டு அக்டோரர் மாதம் நடைபெற்ற TET தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும்.இதில் இந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பளிப்பதாகவும் ,மற்றும் இந்த ஆண்டிற்கான அறிவிப்பு ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிடப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் பதில் அளித்துள்ளார்.

June 21, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு கடிதம் | Special Tamil Nadu Teacher Eligibility Test 2014- Paper II Certificate Verification Call Letter.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 4,477 பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில் 933 பேர் (20 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான சுய விவரப் படிவம், அடையாளப் படிவம், அங்கீகாரப் படிவும் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதில் பங்கேற்பதற்காக அழைப்புக் கடிதங்கள் தனியாக அனுப்பப்படாது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் சலுகை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, அவர்கள் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேறு யாரையாவது நியமிக்கலாம். அதற்காக அங்கீகாரக் கடிதத்தை தேர்வர் அந்த நபருக்கு வழங்க வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடங்கள்:
மதுரை மண்டலம் - கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் - ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை
சேலம் மண்டலம் - நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம்
திருச்சி மண்டலம் - புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் - செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, திருச்சி
விழுப்புரம் மண்டலம் - விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை

June 17, 2014

RTI மூலம் PAPER - I...... PAPER-II இல் மதிப்பெண் வாரியாக வெற்றி பெற்றவர்கள்

RTI REPORT FOR PAPER 1 SG ASST
1.TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 12596
2.TET MARK 100 AND ABOVE MARK CANDIDATE = 2761
3.TET MARK 90 AND ABOVE MARK SC CANDIDATE = 1933 {M=639, F=1294}


RTI REPORT FOR PAPER 2 ENGLISH
1. TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 5330
2. TET 82 TO 89 MARK CANDIDATE = 5386 


3. TET MARK 82 AND ABOVE MARK TOTAL CANDIDATE = 10716
4. TET MARK 82 AND ABOVE MARK SC CANDIDATE = 1811
5. TET MARK 82 AND ABOVE MARK SCA CANDIDATE = 246
6. TET MARK 82 AND ABOVE MARK MBC CANDIDATE = 3359
7. SO BC+BCM+OC+ST = 5300



இந்த மதிப்பிடு ஆனது நமக்கு EMAIL மூலம் கிடக்கப் பெற்றது இதற்க்கான கடிதம் எதுவும் அந்த நபர் நமக்கு அனுப்பவில்லை.......கிடைத்தவுடன் முழு தகவலினை வழங்குகிறோம்.

COURTESY : SURESH.V

June 05, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி : புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் அரசு ஆணை வெளியீடு

டிஇடி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் போடுவது தொடர்பாக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு (டிஇடி தேர்வு) எழுத வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2011ல் தமிழகத்தில் டிஇடி தேர்வு நடத்தி அதில் 150க்கு 90 மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
டிஇடி தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் என்பதை எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு தளர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்று கடந்த பிப்ரவரி மாதம் 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படிதேர்ச்சி பெற்றோருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு நடத்தியது.

TNTET NEW WEGHTAGE CALCULATOR AS PER NEW GO MS71 - 30.05.2014 (EXCEL)

June 04, 2014

73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண் உயர் நீதிமன்ற உத்தரவால் அதிரடி மாற்றம்

உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8- வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும்.
தமிழகத்தில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழகம் முழுவதும் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மார்க்) ஆகும். அதன்படி, தகுதித்தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் எடுத்து 27 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றனர். வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சுமார் 24 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவுசெய்திருந்தது.தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ்2 மதிப்பெண், பட்டப்படிப்பு மதிப்பெண், பி.எட்.மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தகுதித்தேர்வு,பிளஸ்-2, ஆசிரியர் பட்டயப்படிப்பு மதிப்பெண்)அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்பட்டது.அதுமட்டுமின்றி ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட மதிப்பெண்சதவீதம் முதல் குறிப்பிட்ட சதவீதம் வரை குறிப்பிட்ட மார்க்நிர்ணயிக்கப்பட்டு அதன்படி கட் ஆப் மதிப்பெண் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டு அதன்அடிப்படையிலேயே 27 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தி முடிக்கப்பட்டது. மதிப்பெண் சலுகை இதற்கிடையே, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண் தேர்ச்சி 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக (150-க்கு 82 மார்க்) குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம்தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. 5 சதவீத மதிப்பெண் சலுகையால் கூடுதலாக 46 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே, கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21 ஆயிரம் பேருக்கு கடந்த 2மாதங்களுக்கு முன்பு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான (சுமார் 25 ஆயிரம் பேர்) சான்றிதழ் சரிபார்ப்பு மே 6முதல் 12-ம்தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.புதிய கட் ஆப் மார்க் இந்நிலையில், தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது  பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண்,பி.எட். மதிப்பெண்,தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக்கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல்
99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால்,நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மதிப்பெண்ணுக்கு ஏற்ப கட் ஆப் இதே முறைதான் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்.இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள்.உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு புதிதாகசரிபார்ப்பு நடத்தப்படுமா,ஆசிரியர் நியமனம் தாமதம் ஆகுமா என்று கேட்டதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்க ளின் மதிப்பெண் விவரம் எங்களிடம் உள்ளது. கணினி மூலம் அவர்கள் அனைவருக்கும், புதிய முறையில் மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம். இதற்கு எவ்வித காலதாமதமும் ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.

TNTET 2013 New Weightage Comparison Form

ஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய வெயிட்டேஜுக்கான அரசாணை வெளியீடு!

G.O.(Ms.) No.71 Dt: May 30, 2014 School Education - Recruitment of Secondary Grade Teachers and Graduate Assistants in Government schools - Revised criteria for selection of candidates for appointment to the post of Secondary Grade Teachers and Graduate Assistants in Government schools from among those who have cleared Tamil Nadu Teacher Eligibility Test - Orders - Issued Click Here...

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில், ''ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அதிகபட்சம் 60 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் அளிக்கப்படும் எனவும், 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு அதிகபட்சம் 15 மதிப்பெணகள் வெயிட்டேஜ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், D.T.Ed., D.E.Ed. தேர்வுக்கான மதிப்பெண்களுக்கு அதிகபட்சமாக 25 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

May 31, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ளாதவர்களுக்கு 10.6.2014 முதல் 13.62014 வரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவதற்கான கடைசி வாய்ப்பு:

ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு


ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது. இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கா மல் விடுபட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம் மற்றும் பயோடேட்டா போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

May 24, 2014

TNTET - Paper 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் - RTI Letter

   ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்


D.T.ED + B.A(TAMIL) = NOT ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER
B,LIT + TPT =  ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER 
D.T.ED + B.LIT =  ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER 

D.T.ED + B.A(ENGLISH) = NOT ELIGIBLE FOR TAMIL GRADUATE TEACHER

May 12, 2014

TNTET:மே 12 இன்றுடன் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவுபெறுகின்றது...

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது..இன்று இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும், போனமுறை ( ஜனவரி ) சான்றிதழ் சரிபார்ப்பில் சான்றிதழ் இல்லாமல் அல்லது வேறுபிற காரணங்களால் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்களும் கலந்து கொள்ள இன்று கடைசியாக வாய்ப்பளிக்கபடுகிறது..