scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

March 02, 2015

வேலூரில் உள்ள கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
எம்பிபிஎஸ், பி.எஸ்சி, பிஓடி, பிபிடி, எம்எஸ்சி

தகுதி: +2வில்(ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், உயிரியல்)ஆகிய பாடப்பிரிவுகளுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். ரூ.800 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மார்ச் 26 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கூடுதல் தகவல்களுக்கு சிஎம்சி மருத்துவக் கல்லூரி இணையதளத்தை பார்க்கலாம்.

பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

வகுப்பறையில் 2 சிறுவர்களை வைத்து பூட்டியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி 2 மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டியதாக புகார் எழுந்தது. மாணவர்களின் சத்தம் கேட்டு, சிறிது நேரத்துக்கு பின் கதவுகளை திறந்து வெளியேற்றியதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து எழுந்த புகாரின்பேரில், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மூலம், பள்ளித் தலைமை ஆசிரியை செல்வி சுந்தரி மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், பள்ளி முடிந்த பின் வகுப்பறைகளை, அந்தந்த ஆசிரியர்கள் பூட்டுவதற்கு பதிலாக, மாணவர்களே பூட்டிச் சென்ற விவரம் தெரிய வந்தது. எனினும், வகுப்பறையில் வைத்து மாணவர்கள் பூட்டப்பட்டதாக, பெற்றோர்கள் தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை.

இது குறித்த விசாரணை அறிக்கை, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் க. ஜெயமீனா தேவியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் க. ஜெயமீனா தேவி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், வகுப்பறையிலிருந்து மாணவர்கள் சென்றதை உறுதி செய்த பின், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்களே அறைகளை பூட்ட வேண்டும். பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இது குறித்து, அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration - TNPSC - To be opened on 02 Mar 2015

CLICK HERE

பிளஸ் 2 பொதுத் தேர்வில், கண்காணிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வு நடக்கும் மூன்று மணி நேரமும், உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்; தேர்வு அறையில், நாற்காலி போடக்கூடாது என, தேர்வுத்துறை இயக்குனரகம் அதிரடி

உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் 5ம் தேதி துவங்குகிறது. காலை 10:00 மணிக்குத் தேர்வு துவங்கி, பிற்பகல் 1:15 மணிக்கு முடிகிறது.
* முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்து பார்க்கலாம்.
* அடுத்த ஐந்து நிமிடங்கள் மாணவர் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பாளர் சரிபார்க்கலாம்.
* காலை 10:15 மணி முதல் 1:15 மணி வரை தேர்வு நடக்கும்.
* மாணவர்களுக்கு சாதகமாக, தேர்வு அறை கண்காணிப்பாளர், அவர்களை காப்பி அடிக்கவோ, பிட் அடிக்கவோ உதவாத வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் படி,
* இந்த ஆண்டு, தேர்வு அறைக் கண்காணிப்பாளருக்கு தேர்வு அறையில், நாற்காலி போடக்கூடாது.
* தேர்வு அறையில், மாணவர்களின், பெஞ்சில் கூட கண்காணிப்பாளர் அமரக்கூடாது.
* தேர்வு துவங்கும் 10:00 மணி முதல், தேர்வு முடியும் 1:15 மணி வரை கண்காணிப்பாளர் நின்று கொண்டோ, தேர்வு அறையில் நடமாடிக்கொண்டோ, விழிப்புடன் இருக்க வேண்டும்.
* மாணவரிடமோ, அருகில் உள்ள தேர்வு அறைக் கண்காணிப்பாளரிடமோ அனாவசியமாக பேசவோ, கலந்துரையாடவோ கூடாது.
* மொபைல் போன் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனத்தையும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது.
* மாணவர்களிடம் தேவையின்றி பேசுவதோ, வாக்குவாதம் செய்வதோ கூடாது.
* கண்காணிப்பாளராக பணியாற்றும் ஆசிரியர், தன் மொபைல் போனை, தலைமை ஆசிரியர் அல்லது தேர்வு மையத் தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டுத்தான் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.
* தேர்வு மையம் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்தப் பள்ளியில், தேர்வு நாளில் பணியாற்றக்கூடாது.
*பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தேர்வுத் துறை இயக்குனரக உத்தரவுப்படி, வேறு மண்டலத்துக்கோ, மாவட்டங்களுக்கோ தேர்வுப் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

February 28, 2015

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள்

புதுடெல்லி: மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:
* ரூ.ஒரு லட்சம் மதிப்பிற்கு மேல் சொத்து வாங்கினால் பான் கார்டு எண் அவசியம்
*வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை
*தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.5 லட்சமே தொடரும். அதில் மாற்றமில்லை *பான்கார்டு கட்டாயம் தொடரும்
* ஒரு லட்ச ரூபாய்க்கு பொருட்களை வாங்கும்போது பான்கார்டு கட்டாயம் என்பது தொடரும். வணிக நிறுவனங்களுக்கான வரிகுறைப்பு
* வணிக நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்.
* அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் வரி 5 சதவீதமாக குறைக்க படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 5 சதவிகித வரி குறைப்பு 4 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
* வணிக நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக 4 ஆண்டுகளில் குறைக்கப்படும்.
* கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நிலையான வரிக்கொள்கை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை
* தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும்.
* அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.
* சரக்கு மற்றும் சேவை வரி முறையை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. * அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும்.
* இந்தாண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும். * அரசின் அனைத்து திட்டங்களும் வறுமை ஒழிப்பை மையமாகக் கொண்டிருக்குதம்.
* அனைவருக்கும் மின்சாரம் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை 2022ல் அனைவருக்கும் வீடு
* சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டான 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி.
* 5 சதவிகிதத்திற்கு கீழ் சில்லரை விற்பனை பண வீக்கம் நீடிக்கும்.
* வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது. 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்
* நடப்பு பற்றாக்குறை 1 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. * மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயரும்.
* உலகின் 2வது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உள்ளது.
* உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
* இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்.
* இதுவரை 50 லட்சம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* இந்தியாவை தூய்மையாக தேசமாக மாற்ற தூய்மை இந்திய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பு * நடப்பு கணக்கு பற்றாக்குறை ஒரு சதவிகிதத்திற்கு கீழ் குறையும்.
* நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பும் இருக்கும்.
* பொருளாதார வளர்ச்சிக்காக 9 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 100 நாள் வேலை திட்டம் தொடரும்
* 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தொடரும்.
* மத்திய அரசின் இலக்குக்கள் 75வது சுதந்திர தினத்திற்குள் எட்டப்படும்.
* பொது முதலீட்டை 1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க நடவடிக்கை
* வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன. ஜன் தன் வங்கி கணக்கு சாதனை
* ஜன் தன் வங்கி கணக்கு, நிலக்கரி ஏலத்தில் வெளிப்படை தன்மை மற்றும் தூய்மை இந்தியா ஆகிய முக்கிய 3 திட்டங்களில் மத்திய அரசு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.
* வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளேன்.
* சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் முக்கிய குறிக்கோள்.
* அனைத்து கிராமங்களிலும் தொலைத் தொடர்பு வசதி செய்து தரப்படும்.
* பொருளாதார வளர்ச்சியை கணக்கிட புதிய நடைமுறை உருவாக்கப்படும்.
* உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
* 3.9 சதவிதத்துக்குள் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயம்.
* நிதிப்பற்றாக்குறையைை 4.1 சதவீதமாக பராமரிக்க அரசு உறுதி. அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதி
* அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டு செல்வது அவசியம்.
* வேளாண் வருமானத்தை பெருக்குவது சவாலாக உள்ளது.
* நாட்டின் வளர்ச்சி வட கிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
* பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
* மின்சாரம், தூய்மையான குடிநீருக்கு முக்கியத்தும். ரூ.12 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு
* புதிய விபத்து காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.
* ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.
* ஏழ்மையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவ சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்.
* அடல் பென்ஷன் திட்டம் உருவாக்கப்படும்.
* 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும்.

February 25, 2015

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்: பள்ளிக்கல்வித்துறை செயலர்.


பிளஸ் 2 மதிப்பெண் சான்று 10 நாட்களில் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா. சென்னையில் பிளஸ் 2 தேர்வு குறித்த பள்ளிக் கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால் விடைத்தாள்நகல் உடனே கிடைக்க புதிய ஏற்பாடு. விண்ணப்பித்த ஒரு மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்திற்குள் விடைத்தாள் நகல் கிடைக்கும்.

ஜாக்டோ பொறுப்பாளர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையில் முரண்பாடு

இன்று காலை முதல் தலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் சுனுக்கும் ஏற்பட்டுள்ளது. ஜாக்டோ அமைப்பில் 16 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாகவும், இறுதியில் ஜாக்டோ அமைப்பில் உள்ள முதல் 3 பேர் கொண்ட குழு முதல்வரை சந்திக்க அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த 3பேர் கொண்ட குழுவும் முதல்வரை சந்திப்பதற்கான அனுமதி (Appointment) பெறவில்லையெனவும்,
அனுமதி பெற்ற பின் வரவும் என அனைவரையும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று மாலை 4மணிக்கு ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது.

February 24, 2015

கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்'

மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவில், பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ௨௦௧௪ ஆக., ௩௧ன் படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களையும், உபரி ஆசிரியர்கள் பட்டியலையும், 25-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உபரி பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்கள், கலந்தாய்வின்படி பிற ஒன்றியங்கள், மாவட்டத்துக்குள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம்செய்யப்பட உள்ளனர்.

February 22, 2015

ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, 'கோரிக்கை குறித்துப் பேச்சு நடத்த தயார்' என்று, தமிழக அரசு!

ஆசிரியர் சங்கங்கள் முதல்வரை சந்திக்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆசிரியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கை குறித்து, கடந்த பல ஆண்டுகளாக, அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பப்பட்டது; ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 26 சங்கங்கள்: அதனால், 2003க்கு பின், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளன. தொடக்கப் பள்ளி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அனைத்து ஆசிரியர் நலச்சங்கம் உள்ளிட்ட, 28 சங்கங்கள், 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைந்துள்ளன. இந்த, 'ஜாக்டோ' உயர்மட்டக்குழு கூட்டம், சென்னையில் இரு நாட்கள் நடந்தது. இதில், 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று முடிவாகி உள்ளது. ஆசிரியர்கள் போராட்டம் குறித்து, இந்த முடிவை அறிந்த பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், 'ஜாக்டோ' குழுவை சந்தித்து பேச ஒப்புக் கொண்டனர். 'ஜாக்டோ' குழு தலைமைச் செயலகம் சென்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அரசு முதன்மை செயலர் சபிதாவை சந்தித்து பேசினர். அப்போது, 'தற்போது சட்டசபை நடப்பதால், முதல்வரால் சந்திக்க இயலாது; வரும் 25ம் தேதி, முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம்; அதுவரை பொறுத்திருங்கள்; பிளஸ் 2, 10ம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு வருவதால், தற்போது போராட்ட முடிவுகள் எடுக்க வேண்டாம்' என்று, கல்வித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, நிதித் துறைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் மற்றும் முதல்வர் அலுவலகத்தில், மனு அளித்து விட்டு, ஆசிரியர் சங்கங்கள் நம்பிக்கையுடன் திரும்பி உள்ளனர். அவர்கள் கோரிக்கைகள்: * மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, 6வது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, தமிழக ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் படிகள் வேண்டும். * அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை ஊதியத்துடன் தர வேண்டும். * பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். * தமிழ்ப்பாடம் கடைசியாக உள்ள அரசாணையை ரத்து செய்து, தமிழை முதல் பாடமாக்க வேண்டும். * அரசின் நலத் திட்டங்களை அமல்படுத்த, பள்ளிகளுக்கு தலா ஒரு அலுவலர் வேண்டும். * மருத்துவப் பணி சார்ந்த பாதுகாப்புச் சட்டம் போல், ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் வேண்டும். போராட்ட வடிவம் குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர், சத்தியமூர்த்தி கூறியதாவது: விளக்க கூட்டம்: ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு, முதற்கட்டமாக, நாளை மாவட்ட வாரியாக, விளக்கக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 25ம் தேதி, முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என்று, கல்வித் துறை அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர். பின், மார்ச் 8ம் தேதி, மாவட்ட வாரியாக ஆசிரியர் சங்கங்களின் சார்பில், கோரிக்கை குறித்துப் பேரணி நடத்தப்படும். அடுத்தகட்ட திட்டம் குறித்து, உயர்மட்டக் குழு விரைவில் முடிவெடுக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

February 21, 2015

மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க கால அவகாசம்

மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க கால அவகாசம் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும், 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். பதிவு செய்தோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். பிற இடங்ளுக்கு குடி பெயர்தல், கவனக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால், 10 சதவீதம் பேர் புதுப்பிக்க தவறி விடுவதால், பதிவு மூப்பை இழந்து விடுகின்றனர்; வேலைவாய்ப்பும் பாதிக்கிறது.இது போன்றோர் பயன்பெறும் வகையில், '2011 முதல் 2013 வரை, பதிவை புதுப்பிக்கத் தவறியோர், மார்ச் 7ம் தேதி வரை, பதிவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்' என, அரசு சிறப்பு சலுகை அறிவித்தது. அன்று முதல், ஏராளமானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும், இணைய தளம் வாயிலாகவும் பதிவை புதுப்பித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசின் சிறப்புச் சலுகை, மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. இbந்த வாய்ப்பை தவற விட்டால், மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்காது. வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை பெற முடியாமல் போகும்' என்றார்.

10th Hall Ticket Download From 21/02/2015 to 25/02/2015

DGE; HSC REGULAR MARCH 2015 EXAMINATION HALL TICKET DOWNLOAD FROM 21/02/2015 TO 25/02/2015

        CLICK HERE TO DOWNLOAD

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை: அரசாணையில் திருத்தம்

எம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி. பட்டம் பெற்றால் முதல் ஊக்கத் தொகையும், எம்.எட். அல்லது எம்.பில்., பி.எச்டி. படித்தால் இரண்டாவது ஊக்கத் தொகையும் பெறலாம் என அரசாணை திருத்தப்பட்டுள்ளது.  ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே இரண்டாவது ஊக்கத் தொகை பெறும் வகையில் இருந்தது.

               தலைமையாசிரியர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தத் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.  இந்தத் திருத்தத்தை வெளியிட்டதற்காக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

CLICK HERE FOR G.O

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு

தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால், அதிகமாக உள்ள ஆசிரியர்களை குறைவாக உள்ள இடங்களுக்கு பணி நிரவல் மூலம் நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதனால், அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து பட்டியல் அனுப்ப வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. இதற்காக, 26ம் தேதி முதல் தமிழகத்தில் திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தவும் தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் நடக்கும் கூட்டத்தில 5 மாவட்டங்களை சேர்ந்த 66 ஊராட்சி ஒன்றியங்கள், விழுப்புரத்தில் 5 மாவட்டங்களை சேர்ந்த 64 ஊராட்சி ஒன்றியங்கள், காஞ்சிபுரத்தில் 5 மாவட்டங்களை சேர்ந்த 67 ஊராட்சி ஒன்றியங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், ஆய்வுக் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலக நேர்முக உதவியாளர், பிரிவு கண்காணிப்பாளர், பிரிவு எழுத்தர், ஒன்றிய உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்க கல்வித்துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.8.2014ன்படி உள்ள ஆசிரியர், மாணவர் குறித்த விவரங்களை தயார் செய்து 25ம் தேதிக்குள் மாவட்ட கல்வி தொடக்க கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், அதற்கான படிவங்களை பூர்த்தி செய்யும்போது, 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பள்ளி மாதாந்திர அறிக்கை அடிப்படையில் மாணவர்கள் பதிவின்படி விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் அந்தந்த வகுப்புகளுக்கு மொத்தமாக கணக்கிட்டு வகுப்புவாரியாக கொடுக்க வேண்டும். இருமொழி, மும்மொழி என சிறுபான்மை மொழிப் பள்ளிகளுக்கு படிவங்களில் தனியாக விவரங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.  இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

CLICK HERE FOR DIR.PROCEEDINGS

February 19, 2015

பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தவணை சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2வது தவணை முகாமை சிறப்பாக நடத்த மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் 2ஆம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகள், அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்து வசதி குறைவான பகுதிகளிலும் கூட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.முகாம் பணிகளில் பொது சுகாதாரத் துறை, கல்வித்துறை, சமூகநலத்துறை, வருவாய்த் துறை, தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவற்றின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன. இந்த தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இன்று முதல் www.tndge.in என்ற இணைய தளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட இணைய தளத்தில் ‘‘SSLC EXAM MARCH 2015 PRIVATE CANDIDATE HALL TICKET PRINTOUT என கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால் ஹால்டிக்கெட் திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) வியாழக்கிழமை (பிப்ரவரி19) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம். அந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் என்ற பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு, தனித் தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியைப் பதிவு செய்தால் ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.