scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

May 02, 2014

8ம் வகுப்பு தேர்வெழுத ஆன்லைன் விண்ணப்பம்: டிரைவிங் லைசென்ஸ் பெறாதவர்களுக்கு வாய்ப்பு

டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல் தவிப்பவர்கள், நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை, தேர்வுத்துறை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் பெறும் முறை, இன்று முதல் துவங்குகிறது.
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம், எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்புவோருக்கு, விண்ணப்பிக்க அட்டவனை வெளியிட்டுள்ளது. அதில், 2014ம் ஆண்டு, மே, 1ம் தேதி (நேற்று) வரை, பன்னிரண்டரை வயது பூர்த்தியானால் போதும், அவர்கள் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதலாம் என அறிவித்துள்ளது. அதனால், டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல் தவிக்கும் டிரைவர்கள், அந்த தேர்வை எழுதி பயனடைய தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, 75 லட்சம் லாரி உள்ளிட்ட கனரக வாகனம், 40 லட்சம் பஸ் மற்றும் டூரிஸ்ட் வாகனம், 1.6 லட்சம் கூட்ஸ் வாகனம் ஆகியவற்றில், தொழில் சார்ந்து, 15 கோடி மக்கள் உள்ளனர். மேற்கண்ட வாகனங்களை இயக்குவதில், டிரைவர்கள் முக்கியம் பெற்றவர்களாக உள்ளனர். மத்திய மோட்டார் வாகன சட்டப்பட்டி, ஒரு டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டுமானால், குறைந்தப்பட்சம் எட்டாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும். அப்போது தான், டிரைவிங் லைசென்ஸை, சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன அலு-வலர் தருவார். ஆனால், அந்த தொழிலுக்கு பெரும்பாலும் படிப்பறிவு இல்லாவதவர்களே, டிரைவர்களாக வருகின்றனர்.

தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்புவோர், ஏற்கனவே பள்ளிப்படிப்பில் படித்த மாற்றுச்சான்று நகல் அல்லது, பிறப்புச்சான்றிதழ் நகல் என, ஏதாவது ஒன்றை சமர்பித்தால் போதும். விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்ட நோடல் சென்டருக்கு நேரில் சென்று, தேர்வுக்கட்டணம், 125 ரூபாய், ஆன்லைன் பதிவுக்கு, 50 ரூபாய் என, 175 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், 40 ரூபாய்க்கு அஞ்சல் ஸ்டாம்ப் ஒட்டிய, சுய முகவரியிட்ட உறையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இன்று முதல், வரும், 15ம் தேதி வரை, அரசு வேலை நாளில் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால், ஆண்டுக்கு ஒருமுறை தான் நடத்தப்படும். எனவே, டிரைவிங் லைசென்ஸ் பெற விருப்பமுள்ளவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment