நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு நாளை
வெளியாக உள்ள செய்தி இன்று மாலை வெளியானது, இதையடுத்து நாளை மறுநாள்
நடைபெறவுள்ள டிட்டோஜாக் சார்பில் மாபெரும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு
முட்டுக்கட்டை ஏற்படுமோ என பரவலாக ஆசிரியர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இதையடுத்து டிட்டோஜாக தலைவர்கள் உடனடியாக மூத்த வழக்கறிஞ்சர்களை தொடர்பு
கொண்டு தேர்தல் அறிவிப்பு வெளியாவது குறித்த வினவினர்.
அப்பொழுது வழக்கறிஞ்சர்கள் சார்பில் வேலை
நிறுத்தம் செய்வதால் ஏதும் பிரச்சனை இல்லை என்று உறுதியளித்துள்ளதாக
தெரிவித்தனர். இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள் திட்டமிட்டப்படி 06.03.2014
அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment