திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு மற்றும் ஊத்துக்குளி ஆகிய
இரண்டு புதிய தாலுகாக்களை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று "வீடியோ
கான்பரன்சிங்' மூலம் துவக்கி வைத்தார். கடந்த
2013 மே மாதம், சட்டசபையில், திருப்பூர் தெற்கு மற்றும் ஊத்துக்குளி ஆகிய
இரண்டு புதிய தாலுகாக்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதற்கான
பணிகள், வருவாய்த் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு, திருப்பூர் தாலுகாவில்
இருந்து பிரித்து திருப்பூர் தெற்கு மற்றும் அவிநாசி தாலுகாவில் இருந்து
ஊத்துக்குளி என இரண்டு புதிய தாலுகாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை,
சென்னையில் இருந்து "வீடியோ கான்பரன்சிங்' மூலம் முதல்வர் ஜெ., நேற்று
துவக்கி வைத்தார். ஊத்துக்குளியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர்
கோவிந்தராஜ், டி.ஆர்.ஓ., பாரிவேல், ஆர்.டி.ஓ., பழனிக்குமார் உட்பட பலர்
பங்கேற்றனர்.
திருப்பூர் தெற்கு தாலுகா திருப்பூர் தாலுகாவில் உள்ள பகுதிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு, திருப்பூர் தெற்கு தாலுகா அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியங்களில் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் தெற்கு, நல்லூர், தெற்கு அவிநாசிபாளையம் ஆகிய மூன்று பிர்க்காக்களும், அதில், திருப்பூர் தெற்கில் 6; நல்லூரில் 3 மற்றும் தெற்கு அவிநாசிபாளையத்தில், 7 ஆகிய 16 வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தாசில்தாராக பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். தாசில்தார், தலைமையிடத்து துணை தாசில்தார், இரண்டு ஆர்.ஐ.,க்கள், 8 உதவியாளர்கள், இரண்டு இளநிலை உதவியாளர்கள், ஒரு பதிவறை எழுத்தர், ஒரு டைப்பிஸ்ட், 5 அலுவலக உதவியாளர்கள், ஒரு டிரைவர், ஒரு வாட்ச்மேன் ஆகிய 17 பணியிடங்கள், மறுபரவலாக்குதல் மூலம் 26 பணியிடங்கள் என மொத்தம் 43 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பலவஞ்சிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் அலுவலகம் செயல்பட உள்ளது. ஊத்துக்குளி தாலுகா ஊத்துக்குளி பிர்க்காவில், 22 வருவாய் கிராமங்கள் மற்றும் குன்னத்தூர் பிர்க்காவில், 27 வருவாய் கிராமங்களை கொண்டு, ஊத்துக்குளி புதிய தாலுகா அலுவலகம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் துவங்கப்பட்டுள்ளது. தாசில்தாராக வாணி லட்சுமி ஜெகதாம்பாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தாசில்தார், துணை தாசில்தார், மண்டல துணை தாசில்தார், இரு ஆர்.ஐ.,க்கள், 10 உதவியாளர்கள், நான்கு இளநிலை உதவியாளர்கள், 7 அலுவலக உதவியாளர்கள், பதிவறை எழுத்தர், டைப்பிஸ்ட், டிரைவர், வாட்ச்மேன் மற்றும் மறுபரவலமர்த்தல் மூலம் என மொத்தம் 31 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment