scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 18, 2014

தமிழகம் முழுவதும், நாளை, 43,051 மையங்களில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது

சொட்டு மருந்து வழங்கும் மையம், காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை செயல்படும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, 19ம் தேதி ஒரு தவணையும், அடுத்த மாதம், 23ம் தேதி, இரண்டாம் தவணையும், சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன், சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில், மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், முகாம் நாட்களில், சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு, விரலில் மை வைக்கப்படுகிறது. இது, விடுபடும் குழந்தைகளை கண்டறிய உதவுகிறது. முகாம் அன்று, தனியார் டாக்டர்களும், போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், முகாம் அன்று, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். நடமாடும் குழு: முகாம் நடைபெறும் நாள் அன்று, பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக, முக்கிய பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், ஆகியவற்றில், 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு, போலியோ சொட்டு மருந்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,000 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும், சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
சொட்டு மருந்து வழங்கும் பணியில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட, அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

No comments:

Post a Comment