CLCCR- Collaborative Learning Through Connecting Classrooms Across Tamilnadu.
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளிலுள்ள வகுப்பறைகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் குறித்து கோவையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி இன்று நடைபெற்றது.இப்பயிற்சி கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது. CLCCR மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளரும் கரூர் மாவட்ட ஓய்வு பெற்ற முதன்மைக்கல்வி அலுவலருமான திருமதி.ஜெயலட்சுமி அவர்கள் திட்ட விளக்க உரையாற்றி தொடக்கி வைத்தனர். CLCCR மாநிலக் குழு உறுப்பினர்கள் இத்திட்டத்தின் நோக்கங்கள் ,பள்ளிகளில் எப்படி செயல்படுத்துவது என விளக்கினார்கள். இறுதியாக கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நன்றி கூறினார்.இதில்கோவை,திருப்பூர்,நீலகிரி,ஈரோடு,சேலம்,கிருஷ்ணகிரி,நாமக்கல்,புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment