அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தற்போது, 9ம்
வகுப்பு பயிலும், 6,700 மாணவர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற,
தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு
உதவித்தொகை திட்ட தேர்வு, கடந்த ஆண்டு, டிசம்பரில் நடந்தது. அரசு மற்றும்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்,
தேர்வில் பங்கேற்றனர்.
"இதன் முடிவு, 23ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, www.tndge.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்' என, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று தெரிவித்தார். இந்த தேர்வில், 6,700 பேர், தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாணவர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 1,500 ரூபாய் வீதம், பிளஸ் 2 வரை, உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகையை, மத்திய அரசு வழங்குகிறது. தேர்வு நடந்து, ஒரு ஆண்டு முடியும் நிலை உள்ளது என்றாலும், இந்த ஆண்டிற்கான உதவித்தொகை, சம்பந்தபட்ட மாணவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment