scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

November 27, 2013

3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பிரிவுகளாக பாடங்களை பிரித்து, மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவம் என்ற அடிப்படையில், தேர்வு நடத்தி, மாணவ, மாணவியரின் கற்றல் திறன் மதிப்பிடப்படுகிறது. தற்போது இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் நிலையில், வரும் டிச., 10 முதல் 23 வரை, பள்ளிகளில் இரண்டாம் பருவ தேர்வு நடக்கிறது. தேர்வு விடுமுறைக்குபின், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

அதற்காக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்க, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. சென்னையில் உள்ள அரசு பாடநூல் கழகத்தில் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அப்புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் கூறுகையில்,""மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள், சென்னையில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. புத்தகங்கள் தொடர்ந்து வருவதால், மொத்த எண்ணிக்கை விவரம், இன்னும் தெரியவில்லை. சில தினங்களில், அனைத்து புத்தகங்களும் வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இரண்டாம் பருவ தேர்வு முடிந்தபின், பள்ளிகளில் வகுப்பு வாரியாக மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment