scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 29, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் TRB அறிக்கை தாக்கல்.


2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிரமீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள்
அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியஇணையதளத்தில் வெளியிடப்பட்டன. தமிழ் தவிர மீதமுள்ள  முதுநிலைப் பட்டதாரிபோட்டித் தேர்வில் வெற்றி பெற்ற. 2,276,பேருக்குஆசிரியர் தேர்வு வாரியத்தால் அக்.22, 23 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக்  குறிப்பேட்டில்  குறிப்பிட்டவாறு  வகுப்புவாரி  இடஒதுக்கீட்டின் கீழ்  இறுதி கட் -ஆப்  மதிப்பெண்  பெற்றவர்கள்  அனைவரும்  அழைக்கப்படவில்லை .வயதில்  மூத்தோர்  மட்டுமே  அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை      எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜோதி ஆபிகாரம் உள்ளிட்ட  மூவர் தாக்கல்செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,தேர்வு எழுதியவர்களில்தகுதியானவர்கள், விடுபட்டவர்கள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்தபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் எனஉத்தரவிட்டார். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடவும்இடைக்காலத் தடை விதித்து விசாரணையை அக்.28 ஆம்தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்ற  உத்தரவுப்படி  123  பேர்கள்  அடங்கிய  கூடுதல்  பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.நேற்று  (அக் 28) நீதியரசர்  எஸ் .நாகமுத்து  முன்னிலையில்  6 வழக்குகள் விசாரணைக்கு  வந்தது  இவை வெவ்வேறு  கோரிக்கைகளுக்காக  தொடுக்கப்பட்டுள்ளதால்  3   தொகுப்பாக  பட்டியளிடப்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது.

இன்று  TRB சார்பில்  சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர்  மற்றும்  நீதிமன்ற  உத்தரவுப்படி  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டார்  பட்டியல்  நீதிமன்றத்தில்   சமர்ப்பிக்கப்பட்டது.முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பாக தாக்கல்  செயப்பட்ட வழக்குகள் மனுதாரர்களின் பெயர்கள்  கோர்ட்  உத்தரவிப்படி  கூடுதல்  சான்றிதழ்  சரிபார்ப்பு  பட்டியலில்  இடம் பெற்றுள்ளதால்  3   வழக்குகள் பைசல்  செய்யப்பட்டது .     முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக தொடுக்கப்பட்ட மற்ற 3 வழக்குகள் விசாரணைக்கு  ஒத்திவைக்கப்பட்டன
.

No comments:

Post a Comment