வாக்காளர் அடையாள அட்டை இனி வரும் காலங்களில், ஏ.டி.எம்., கார்டு
வடிவில் வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து
வருகிறது. தமிழகத்தில், 2014ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்.,
1ல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம், புதிய
வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இன்று(அக்.,31)
கடைசி நாள்.
வாக்காளர் அடையாள அட்டை தற்போது "லேமினேட்' செய்யப்பட்டு
வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் ஏ.டி.எம்., கார்டு வடிவில்
வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக
எல்காட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
No comments:
Post a Comment