scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 08, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பார்க்கலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, அந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது.

தமிழ் வினாத்தாளில் குழறுபடி
இதற்கான போட்டி தேர்வு கடந்த ஜூலை மாதம் 21–ந் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வு, பல்வேறு பாட ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்டது. தமிழ் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில், 40–க்கும் மேற்பட்ட வினாக்களில் எழுத்து பிழை இருந்தது.
இது பற்றி, வினாத்தாள் எங்களுக்கு புரியவில்லை என்று கூறி அந்த தேர்வை எதிர்த்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், தமிழ் தேர்வை மீண்டும் நடத்தும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழ் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்று, தேர்வு எழுதிய பட்டதாரிகள் காத்திருக்கிறார்கள்.
தேர்வு முடிவு
இந்த நிலையில், தமிழ் பாடம் அல்லாத மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.
இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
இணையதளத்தில் வெளியீடு
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான, 2881 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஜூலை மாதம் 21–ந் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில், தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள், www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment