scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 17, 2013

குழந்தை திருமணத் தடை சட்டம் பற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

ராமநாதபுரம்: மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு "குழந்தை திருமணத் தடை
சட்டம்" குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
பெண் 18 வயதும், ஆண் 21 வயதும் நிறைவடையாத நிலையில் செய்யப்படும் திருமணம், குழந்தை திருமணமாகும். வறுமை, சமூகத்தில் பெண்களுக்கு ஆண்களினால் வரும் பாலியல் தொல்லையில் இருந்து திருமணமே பாதுகாப்பு என்ற போலியான நம்பிக்கை போன்று பல்வேறு காரணங்களால் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் சீக்கிரம் திருமணம் செய்து வைக்கின்றனர்.
இதனால், அவர்களது கல்வி பாதிக்கப்படுவதோடு, சிறியவயதில் கருவுறுதல் நிலை ஏற்படும். ஆனால், இளம் வயது என்பதால் கர்ப்பபை முழுவளர்ச்சி அடையாததின் காரணமாக அடிக்கடி கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு ஆவதால் உடல் பாதிக்கப் படும்.
சட்டம் என்ன சொல்கிறது?
குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் 2006ன்படி, குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும், அல்லது இரண்டும்.
18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட வாலிபர் குற்றவாளியாவர். குழந்தை திருமணத்தை நடத்தியவர், தூண்டியவர், நெறிப்படுத்தியவர் அனைவரும் குற்றவாளிகள் ஆவர்.
சமூக பாதுகாப்பு அலுவலர் மணிமேகலை கூறியதாவது: மாவட்டத்தில், குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு குறைவால், இதுபோன்ற திருமணங்கள் கிராமப்பு றங்களில் அதிகமாக நடக்கிறது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

"சைல்டு லைன்" மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், அந்தந்த ஊராட்சி தலை வர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று வருகின்றனர். இதனால், எதிர்காலத்தில் மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் குறைய வாய்ப்பு உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment