scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

September 03, 2013

சிறப்புக் காவல் படைக்கு 10,500 பேரை தேர்ந்தெடுக்க நவ.10-இல் எழுத்துத் தேர்வு


தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் இணைவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 வயதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 30 வயதும் அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பணி நியமனம் பெறுவதற்கு, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறருக்கான சிறப்பு ஒதுக்கீடுகள் ஏதுமில்லை. விண்ணப்பதாரர்கள் எந்த மாவட்டத்தில் அல்லது மாநகரத்தில் தேர்வு செய்ய விரும்புகிறாரோ அந்த மாவட்டம் அல்லது மாநகரை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

விரும்பிய மாவட்டம் அல்லது மாநகரத்துக்கு மட்டுமே தேர்வு செய்யப்படுவர். இந்த விருப்பத்தை பிறகு மாற்ற முடியாது. சென்னைக்கு பத்து மடங்கு: மொத்தமுள்ள 10 ஆயிரத்து 500 இடங்களில், சென்னைக் காவலுக்கு மட்டும் 2 ஆயிரத்து 835 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக, வேலூர் மாவட்டத்துக்கு 370 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 360 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். கோவை, மதுரை, திருநெல்வேலி மாநகரங்களுக்கு தலா 110 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பணிகள் என்ன? சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதாந்திர மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கப்படும். காவல் வாகனங்களை ஓட்டுதல், அலுவலகக் கடிதங்களைப் பட்டுவாடா செய்தல் மற்றும் கம்ப்யூட்டர் விவரப் பதிவுப் பணிகள், காவலர் குடியிருப்புகளைப் பராமரித்தல், விபத்தில் உயிர்ப் பலிகள் ஏற்படாத வகையில் தடுக்கும் பணியில் காவல் படைக்கு உதவி செய்தல் போன்ற பணிகள் இளைஞர் காவல் படைக்கு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு: விடைகளைத் தெரிவு செய்து எழுதும் வகையிலான கொள்குறி முறையில் கேள்விகள் கேட்கப்படும். வினாத்தாள் தமிழில் இருக்கும். குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற வேண்டும். பத்தாம் வகுப்பு நிலையிலான தமிழ், ஆங்கிலம், கணிதம், பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய தேசிய இயக்கம், நடப்பு நிகழ்வுகள், போக்குவரத்துச் சைகைகள் மற்றும் முதலுதவி ஆகியன தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும். உடற்தகுதி தேர்வும் நடத்தப்படும். ஓட்டம், கயிறு ஏறுதல் போன்றவற்றிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம் மற்றும் அறிவுரைகள் அடங்கிய கையேட்டினை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், மாநகர ஆணையாளர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் செப்டம்பர் 30 ஆம் தேதி மாலைக்குள் வந்து சேர வேண்டும்.

No comments:

Post a Comment