scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 16, 2013

மண்டல மையங்களில்பி.எட்., மதிப்பெண் பட்டியல் வினியோகம்

"பி.எட்., மதிப்பெண் பட்டியல்களை, மண்டல மையங்களில் நாளை பெற்று கொள்ளலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது:

:தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றுக்கான தேர்வு மே மாதம் நடந்தது. இத்தேர்வை, 68, 800 பேர் எழுதினர்.இதில்,, 94 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக தேர்ச்சி சான்றிதழ்களை, நாளை (17ம் தேதி) மண்டல மையங்களில் பெற்று கொள்ளலாம்.
ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட கல்லூரிகள், கோவை, என்.ஜி.டி., கல்வியியல் கல்லூரியிலும்; நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகள், திருச்சி, ஜமால் முகமது கல்வியியல் கல்லூரியிலும் பெற்று கொள்ளலாம். தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மாவட்ட கல்லூரிகள், சேலம், பத்மாவதி கல்வியியல் கல்லூரியிலும்; திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை மாவட்ட கல்லூரிகள், மதுரை, தூய செயின்ட் ஜெஸ்டின் கல்வியியல் கல்லூரியிலும் பெற்று கொள்ளலாம்.கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்ட கல்லூரிகள், நெல்லை, செயின்ட் இனிஷியேஸ் கல்வியியல் கல்லூரியிலும்; திருவள்ளூர், காஞ்புரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை மாவட்ட கல்லூரிகள்,
சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திலும் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு, விஸ்வநாதன் கூறினார்.

No comments:

Post a Comment