scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

May 10, 2015

எம்.பி.பி.எஸ். கட்–ஆப் மார்க் குறைவதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு

பிளஸ்–2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வருடம் பிளஸ்–2 உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் 200–க்கும் 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும். இதனால் மருத்துவ கட்–ஆப் மார்க் 0.5 அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200–க்கு 200 கட்–ஆப் மதிப்பெண் 132 மாணவர்கள் எடுத்து இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 200–க்கு 200 மதிப்பெண் 5 பேர் மட்டுமே பெற்றுள்ளனர். மேலும் 200–க்கு 199.75 கட்–ஆப் மதிப்பெண்ணில் தொடங்கி 199 வரை கட்–ஆப் மதிப்பெண் போட்டி குறைவாக இருக்கும். 200–க்கு 199–க்கு கீழே 198.75 முதல் 197.75 வரை வழக்கமான கட்–ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்படும். இந்த ஆண்டு 197.5 கட்–ஆப் மதிப்பெண் எடுத்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் போன 1266 மாணவர்கள் இந்த வருடம் சேர முயற்சி செய்கின்றனர். மருத்துவ கட்–ஆப் மார்க் குறைவதால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்களில் பலர் என்ஜினீயரிங், பல் மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளை தேர்வு செய்து ஒரு ஆண்டு படித்து வந்த போதிலும் ஒரு மார்க் 0.5 கட்–ஆப்பில் அரசு மருத்துவ கல்லூரி வாய்ப்பை இழந்தவர்கள். அதனால் பழைய மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே தற்போது பிளஸ்–2 முடித்துள்ள மாணவர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை உறுதி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 197.50 கட்–ஆப் மார்க் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பழைய மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமைந்துள்ளது. 400 பழைய மாணவர்கள் இந்த வருடம் மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொறியியல் படிப்பை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 9710 மாணவர்கள் கணிதத்தில் 200–க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 200–க்கு 198 மதிப்பெண் 15 ஆயிரம் மாணவர்கள் எடுத்துள்ளனர். பொறியியல் படிப்புக்கு உரிய இயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண்ணை, பிரதான கணிதப் பாடத்தில் மாணவர்கள் எடுத்துள்ள அதிக மார்க் சமன் செய்து விட்டது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பி.இ, கட்–ஆப் 200–க்கு 0.25 மதிப்பெண் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பு: மே 14ம் தேதி முதல் விண்ணப்பம்

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு, வரும், 14ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், '2015 - 16ம் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி டிப்ளமோ படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மே, 14 முதல் ஜூன், 4ம் தேதி வரை விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன், 4ம் தேதிக்குள் வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்.: நாளை முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 11) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பிளஸ் 2 படிப்பில் உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ப்பதற்கு விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது. சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. வேண்டுகோள் கடிதம்: எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தைப் பெற, வேண்டுகோள் கடிதத்துடன் 'Secretary, Selection Committee, Kilpauk, Chennai' என்ற பெயரில் விண்ணப்பக் கட்டணமான ரூ. 500-க்கு வரைவுக் காசோலை ஆகியவற்றை அளிப்பது அவசியமாகும். இணையதளம் வாயிலாக: சுகாதாரத் துறையின் இணையதளம்www.tnhealth.orgமூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விநியோகம் தொடங்கும் திங்கள்கிழமையன்று (மே 11) பகல் 12 மணிமுதல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்- மாற்றுத் திறனாளிகள்- முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் படிவங்கள் ஏற்கெனவே சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மே 28-ஆம் தேதி வரை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துசேர, வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். தரவரிசைப் பட்டியல் எப்போது? கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் பி.இ. கலந்தாய்வுக்கு முன்னதாக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெற உள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 15-ஆம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. ஜூன் மாதம் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிகிறது.

May 08, 2015

மே 19முதல் எம்.பி.பி.எஸ் விண்ணப்பம் - மே 19முதல் எம்.பி.பி.எஸ் விண்ணப்பம்

தமிழக அரசின் 19 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 11 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29ம் தேதி கடைசி நாள். ஜூன் 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். கடந்த ஆண்டு போல் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன; அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 383 இடங்கள் போக மாநிலத்திற்கு 2,172 இடங்கள் கிடைக்கும். சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.ஓமந்தூரர் அரசு மருத்துக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் - எம்.சி.ஐ., அனுமதி 15ம் தேதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மொத்தம், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு 10ம் தேதி வெளியிடப்படும்.

May 07, 2015

பி.இ. விண்ணப்பம்: இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் என்ன? எங்கே பெறலாம்?

பொறியியல் படிப்புகளில் சேரப்போகும் மாணவர்களின் வசதிக்காக பி.இ. கலந்தாய்வு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் அவற்றை எங்கே பெறுவது என்பன குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் பிளஸ் 2 தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 2015 மார்ச் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வின்போது அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இருந்தபோதும் விண்ணப்பத்துடன் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைச் சமர்பித்தால் போதுமானது. எலெக்ட்ரானிக் இருப்பிடச் சான்று: 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகியவற்றில் ஏதாவது ஒரு படிப்பையோ அல்லது இந்தப் படிப்புகள் அனைத்தையும் தமிழகத்தில் படிக்காத தமிழகத்தைச் சொந்த மாநிலமாகக் கொண்ட மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழையோ விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது கட்டாயம். இந்தச் சான்றிதழை அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுச்சேவை மையங்களில் பெற வேண்டும். அதுவும் டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய எலெக்ட்ரானிக் இருப்பிடச் சான்றிதழை (இ-சர்ட்டிபிகேட்) மட்டுமே இம்முறை சமர்ப்பிக்க வேண்டும். முதல் தலைமுறை மாணவர் சான்று: குடும்பத்தில் வேறு யாரும் பட்டப் படிப்பு படிக்காத நிலையில், பொறியியல் படிப்பில் சேரப்போகும் மாணவருக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மட்டுமல்லாமல் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேரப்போகும் மாணவர்களும் இந்தச் சலுகையைப் பெற முடியும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், அதற்கான சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பொதுச்சேவை மையங்களில் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதுவும் டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய எலெக்ட்ரானிக் சான்றிதழாக (இ-சர்ட்டிபிகேட்) இருக்க வேண்டும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். இடஒதுக்கீடு சிறப்பு சலுகைகள்: இதர படிப்புகளைப் போன்று பொறியியல் படிப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத சிறப்பு இடஒதுக்கீடும், விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படுகின்றன. இதில் 12 இடங்கள் அண்ணா பல்கலைக்கழக துறைகளில் ஒதுக்கப்படும். இதுதவிர, ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள், கை அல்லது கால் ஊனமுற்றவர்கள், காது கேளாதவர்கள், பார்வை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவர்கள் அது சார்ந்த சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இவர்களுக்கான சான்றிதழ் படிவங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

May 04, 2015

ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.

AFMC என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியில், இந்தக் கல்வி ஆண்டுக்கான MBBS படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு AIPMT 2015 என்ற நுழைவுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். மொத்தமுள்ள 130 இடங்களில் 105 இடங்கள் ஆண்களுக்கும், 25 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்படும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்ய மே 15 கடைசி நாள். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் கடைசி நாள் மே 18. வகுப்புகள் தொடங்கும் நாள் ஆகஸ்ட் 1. விருப்பமுள்ளவர்கள், www.afmc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் இதர தகவல்களை அறியலாம்.

கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே மாணவர் சேர்க்கை... பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இம்முறை முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு கல்லூரி முதல்வர்கள் கூறியது: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தலைசிறந்த பேராசிரியர்கள் பலர் உள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளும் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே ஆரம்பித்துவிடுவதால், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும், படிப்பில் மிகுந்த ஆர்வமுள்ள மாணவர்களும் பிரபல தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். இந்த நிலை காரணமாக அரசு கல்லூரிகளில் உள்ள முழுமையான திறன், வெளிப்படாமலே போய்விடுகிறது. இந்த நிலையை மாற்றும் வகையில், தனியார் கல்லூரிகளைப் போல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்த இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், திங்கள்கிழமை விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டு, மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்துக்குள் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும் என்றனர். விண்ணப்பக் கட்டணம் முறைப்படுத்தப்படுமா? இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு உதவி பெறும் கலை,அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது. சில கல்லூரிகள் புதன்கிழமை (மே 6) விண்ணப்பங்களை விநியோகிக்க உள்ளன. இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலானவை விண்ணப்பக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி வசூலிப்பதை ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசு கல்லூரிகளில் உள்ளது போன்றே விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தக் கல்லூரிகள் விண்ணப்பத்துக்கான கட்டணத்தை ரூ. 250 முதல் ரூ. 500 வரை நிர்ணயிக்கின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டிலும் பல கல்லூரிகள் விண்ணப்பக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி நிர்ணயித்திருப்பது தொலைபேசித் தகவல் மூலம் தெரியவந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். விண்ணப்பக் கட்டணத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.

LAB ASSISTANT EXAM 2015 MODEL QUESTION

CLICK HERE-LAB ASST -MODEL QUESTION

April 25, 2015

மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்!

எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி முதல் வழங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது .

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணியின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்; இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்சவயது வரம்பு தளர்வு உண்டு!!

CLICK HERE FOR NOTIFICATION OF LAB ASSISTANT!! 

April 20, 2015

இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசலாம்: பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை!!

தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியால் உலகின் எந்த மூளையில்ஒருவர் இருந்தாலும் அவருடன் தொடர்பு கொண்டு பேசக்கூடிய வாய்ப்பு இப்போது உள்ளது. இணையதளம், செல்போன், இ.மெயில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். என பல்வேறு தொழில்நுட்பம் மூலம் தகவல்களை படத்துடன் பரிமாறிக்கொள்ளும் நிலை உள்ளது. இதற்கு ஒருபடி மேலாக ‘வாட்ஸ்அப்’ என்னும் நவீன தகவல் தொழில் நுட்பம் தற்போது உலகம் முழுவதையும் கைக்குள் கட்டிப்போட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சாதாரண டெலிபோன் (தரைவழி)களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டன. ஒரு காலத்தில் டெலிபோன் வசதி வைத்திருக்கும் குடும்பத்தினரே செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டனர். ஆனால் செல்போன் எப்போது வந்ததோ அதில் இருந்து டெலிபோன்களுக்கு மவுசு குறைந்தது. பன்னாட்டுகட்டணம், வெளி மாநில கட்டணம் என பல்வேறு நிலைகளில் டெலிபோன் கட்டணம் வசூலிக்கப்பட்டது. காலப்போக்கில் செல்போன் கிராமங்கள் வரை சென்றடைந்ததை தொடர்ந்து தரைவழி டெலிபோன்கள் காணாமல் போய் விட்டது. இதற்கிடையில் தொலை தொடர்புத்துறையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு போட்டியாக பல தனியார் நிறுவனங்களும் களம் இறங்கியதால் கடுமையான போட்டி ஏற்பட்டது. நிறுவனங்களுக்கு இடையே போட்டி போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதால் டெலிபோன்கள் பயன்பாடு படிப்படியாக குறைந்தது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான டெலிபோன் இணைப்புகள் கடந்த 10 வருடத்தில் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் 2 கோடியே 80 லட்சம் தரைவழி டெலிபோன்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 13 லட்சத்து 60 ஆயிரம் பி.எஸ்.என்.எல். டெலிபோன்கள் பயன்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் டெலிபோன் சரண்டர் அதிகரித்து வந்ததால் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அவற்றை தடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார்கள். மேலும் இதனால் பி.எஸ்.என்.எல். வருவாயும் கணிசமாக குறைந்தது. இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்பவர்கள் தான் பெரும்பாலும் பி.எஸ்.என்.எல். டெலிபோனை பயன்படுத்துகின்றனர். தவிர வணிக பிரமுகர்கள் வர்த்தக பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட அளவு தரை வழி டெலிபோனை உபயோகப்படுத்துகின்றனர். இந்த நிலையில்டெலிபோன் சரண்டர்களை தடுக்கும் வகையில் ஒரு அதிரடி திட்டத்தை பி.எஸ்.என்.எல். மே 1–ந் தேதி அறிமுகப்படுத்துகிறது. இதுவரையில் யாரும்எதிர்பார்க்காத வகையில் இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. பி.எஸ்.என்.எல். டெலிபோனில் இருந்து இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு தர திட்டமிட்டுள்ளது. இது தரைவழி போனில் இருந்து பி.எஸ்.என்.எல். செல்போன், தரைவழி போன் மற்ற தனியார் நிறுவனங்களின்செல்போன், தரைவழி போன்களுக்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக பேசலாம். இந்தியாவிற்குள் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் குறிப்பிட்ட இந்த நேரத்தில் இலவசமாக பேசும் வசதியை தர இருக்கிறது. இதன் மூலம் தற்போது உள்ள டெலிபோன் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதோடு மட்டுமின்றி புதிதாக சேர்க்கவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சலுகை திட்டம் மே 1–ந் தேதி முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வருகிறது. தற்போது உள்ள அனைத்து தரைவழி சந்தா தாரர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள்பி.எஸ்.என்.எல்–க்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த திட்டம் பி.எஸ்.என்.எல்.க்கு புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தரும் என்று நம்புகிறோம் என்றார்.

April 11, 2015

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள்: மே முதல் வாரத்தில் விநியோகம் By dn, சென்னை

தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வில் பங்கேற்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது. விண்ணப்பங்களை அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இரண்டே கால் லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளது. மே மாதம் முதல் வாரத்தில் பிளஸ் தேர்வுகள் வெளியாகும் என்பதால், அதற்கு முன்பே விண்ணப்ப விநியோகத்தைத் துவக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு விண்ணப்பப் படிவங்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

நடுநிலைப்பள்ளி விடைத்தாள் மற்ற ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்த வேண்டும்... : மாணவர்களின் கல்வித்தரம் அறிய வலியுறுத்தல்

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அறிய, அவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்களை, மற்ற ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்துவதற்கு, கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மட்டுமே, பிற மாவட்ட ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன. மாணவர்களின் கல்வித்தரத்தை அளவிடுவதில், எவ்வித முறைகேடும் நடைபெறாமல் இருக்க, இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது. தற்போது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, "ஆல்பாஸ்' முறை என்பதால், மாணவர்கள் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற புகார் உள்ளது. தேர்வில் முழுமையாக விடை எழுதாவிட்டாலும், அம்மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில், ஆசிரியர்கள் உள்ளனர். இதனால், பல பெற்றோருக்கு குழந்தைகளின் கல்வித்தரம் குறித்து, முழுமையாக அறிய முடிவதில்லை. இந்நிலையை மாற்றும் வகையில், பல மாவட்டங்களில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தேர்வு விடைத்தாள்களை, மற்ற ஒன்றிய பள்ளி ஆசிரியர்களின் மூலம் திருத்துவதற்கான நடவடிக்கைகள், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், மாணவர்களின் உண்மையான கல்வித்தரத்தையும், பள்ளியின் தரத்தையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்நடைமுறையை, திருப்பூர் மாவட்டத்திலும் பின்பற்ற வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களின் கல்வித்தரத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்வதால், அவர்கள் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தேர்வு முடிவு தெரிவிக்கப்படும் நாளில், அதை தெரிந்து கொள்வதில் கூட ஆர்வம் காட்டுவதில்லை. மாணவர்களை, கட்டாயம், "பாஸ்' செய்தே தீர வேண்டும் என்ற நிலையில், ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளின் கற்பித்தல் நிலை என்ன என்பதை, அந்தந்த பள்ளி நிர்வாகத்தினரே அளவிட முடியாத நிலை உள்ளது. மற்ற பள்ளி ஆசிரியர்கள் மூலம் தேர்வு விடைத்தாள்களை திருத்தினால், மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமின்றி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் சுயமதிப்பீடு செய்ய முடியும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடப்பது போல், துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், மூன்றாம் பருவத்தேர்வை முன்னதாகவே நடத் தினால், அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கையை விரைந்து துவக்க முடியும். இதற்கு, மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.