scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label B.Ed. Show all posts
Showing posts with label B.Ed. Show all posts

October 10, 2013

தொலைதூரக் கல்வியில் முதல்முறையாக எம்.எட். (சிறப்பு கல்வி) படிப்பை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.

தபால்வழியில் பி.எட். படிப்புமதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், கோவை பாரதியார், தஞ்சை தமிழ், நெல்லை மனோன்மணீயம், சிதம்பரம் அண்ணாமலை, தமிழ்நாடு திறந்தநிலை என குறிப்பிட்ட சில
பல்கலைக்கழகங்கள் மட்டுமே தபால்வழியில் பி.எட். படிப்புகளை வழங்குகின்றன. இதேபோல் மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமும் இப்படிப்பை வழங்குகிறது.மாற்றுத் திறனாளி மாணவர்களின் ஆசிரியர்கள்அஞ்சல்வழி பி.எட். படிப்பில் யார் வேண்டுமானாலும் சேர்ந்துவிட முடியாது. பட்டப் படிப்புடன் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் கட்டாயம் அவசியம்.

October 09, 2013

பி.எட் படிப்பிற்கு அக்.,20ம் தேதி நுழைவுத்தேர்வு


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்., 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை கல்வியியல் படிப்பான பி.எட் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த படிப்புக்கு பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அக்., 20ம் தேதி நடைபெறும் நுழைவுத்தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு www.bdu.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

September 20, 2013

2014-2015 பாரதிதாசன் தொலைக்கல்வி மையத்தின் -B.Ed விண்ணப்பங்கள் வழங்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் B.Ed விண்ணப்பங்கள் வழங்கும் தேதி அக்டோபர்6 வரை நீடிக்கப்பட்டுள்ளது.மேலும்
நுழைவுத்தேர்வு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு -0431-2407027,,2407028,2407054

September 17, 2013

பி.எட். இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்


பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 17, 18 தேதிகளில் நடத்தப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் 342 பி.எட். இடங்கள் காலியாக இருந்தன. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நடத்தி வருகிறது.
முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதன் முடிவில் 342 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடத்தப்படுகிறது

August 26, 2013

B.ED.,PAST FIVE YEAR JUNE AND DECEMBER QUESTION PAPERS


IGNOU - TEE- FIVE YEARS QUESTION PAPERS DECEMBER-2011,2010,2009,2008,2009

IGNOU - TEE- FIVE YEARS QUESTION PAPERS DECEMBER-2011,2010,2009,2008,2007

August 24, 2013

பி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங் 2013-14 - தேதி வாரியான விபரங்கள், கட்-ஆப் மதிப்பெண்கள் மற்றும் அரசு/ அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் விவரங்கள் மற்றும் வழிக்காட்டு அரசாணை | B.Ed 2013-14 Counselling

பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங், ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5ம் தேதி வரை பல்வேறு பாடங்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த கவுன்சிலிங் நிகழ்ச்சி, சென்னையிலுள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், ஒற்றை சாளர முறையில் நடைபெறுகிறது.
click here for B.Ed Cut Off Marks,
Guideline GO
Listof Govt and Aided Colleges
விரிவான தேதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 30 - மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான கவுன்சிலிங்.
ஆகஸ்ட் 31 - இயற்பியல், ஹோம் சயின்ஸ் மற்றும் கணிதம் ஆகியபாடங்களுக்கான கவுன்சிலிங்.
செப்டம்பர் 1 - கணிதம் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.
செப்டம்பர் 2 - விலங்கியல் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.
செப்டம்பர் 3 - ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.
செப்டம்பர் 4 - வேதியியல், கணிப்பொறி அறிவியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.
செப்டம்பர் 5 - தாவரவியல் பாடத்திற்கான கவுன்சிலிங்.

August 23, 2013

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


CLICK HERE TO VIEW ADVERTISEMENT DETAILS.....................


Prospectus issuing place Date
Admission Centre From : 19.08.2013
Palkalai Nagar To : 06.09.2013
Madurai Kamaraj University
Madurai- 21

விண்ணப்பதாரர்கள் யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற மேல்நிலை பள்ளியில் இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.