Pages

November 29, 2013

வாடிக்கையாளர் தனது கணக்கை வேறு வங்கிக் கிளைக்கு மாற்றும் போது அவரது கணக்கு எண் மாறக் கூடாது-RBI

வாடிக்கையாளர் தனது கணக்கை வேறு வங்கிக் கிளைக்கு மாற்றும் போது  அவரது கணக்கு எண் மாறக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி  உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  “வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த ஒரு கிளைக்கும் தனது  விருப்பப்படி கணக்கை, எத்தனை முறைவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள அனுமதிக்க  வேண்டும்.

அவ்வாறு வாடிக்கையாளர்,அதே வங்கியின் வேறொரு கிளைக்கு தனது கணக்கை  மாற்றும் போது, பழைய வங்கி கணக்கு எண்ணையே பராமரிக்க வேண்டும். புதிதாக கணக்கு தொடங்குவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றக் கூடாது” என்று  கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment