பி.எஸ்சி (வேதியியல்) மற்றும் பி.எட் (தாள் 1 ஆங்கிலம், தாள் 2 பிசிக்கல் சயின்ஸ்) முடித்தவர் தொடர்ந்து
பி.ஏ (ஆங்கிலம்) மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பை முடித்து தகுதி தேர்வு
தாளில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதலாமா என்ற
கேள்விக்கு, "3 ஆண்டுகள் ஆங்கில பட்டம் பெற்று பி.எட்முடித்தவர்கள்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆங்கில பட்டதாரியாக நியமனம்
பெறலாம்'' என ஆசிரியர் தேர்வு வாரியம்பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பி.எஸ்சி
பி.எட் முடித்த பின்னர் பி.ஏ (ஆங்கிலம்) மூன்று ஆண்டுகள் படித்தவர் தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணி
அமர்த்தப்படுவாரா என்ற கேள்விக்கு, பணி அமர்த்தப்படுவர் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment