scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label செயல்முறைகள். Show all posts
Showing posts with label செயல்முறைகள். Show all posts

November 05, 2014

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்! : கல்வியாண்டு இறுதி வரை பணியாற்றலாம் மறு நியமன காலத்திலும் குறைவில்லாத சம்பளம்

மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக் கல்வித் துறை நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்த, 2003ல் இருந்து, பணியில் சேர்ந்த ஆசிரியர், கல்வி ஆண்டின் பாதியில், ஓய்வூதிய வயதை எட்டினாலும், கல்வி ஆண்டு இறுதி வரை, பணியில் தொடரலாம். ஓய்வு பெறுவதற்கு முன் பெற்ற சம்பளம், மறு நியமன காலத்திலும் வழங்கப்படும்' என, அத்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் பலன்கள்:

மொத்தம், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலன் அடைவர்.
ஒரு கல்வி ஆண்டான, ஜூன் முதல், மே வரையிலான, எந்த மாதத்தில் ஆசிரியர் ஓய்வு வயதை எட்டினாலும், மாணவர் நலனை கருத்தில் கொண்டு, அந்த ஆசிரியர், அந்த கல்வி ஆண்டு முழுவதும், வேலையில் இருக்க அரசு அனுமதித்து உள்ளது.
ஓய்வு பெறும்போது, என்ன சம்பளம் வாங்கினாரோ, அதே சம்பளம், அந்த கல்வி ஆண்டு முடியும் வரை பெற முடியும். பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் வரவேற்றுள்ளார்.

CLICK HERE - DSE.78551 / C5 / E3 / 2014, DATED.29.10.2014 - RE-EMPLOYMENT FOR CPS TRs REG INSTRUCTIONS 

November 03, 2014

தனி நபர் தகவல் தொகுப்பு முறை (PIS) இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பான பள்ளிகல்வி இயக்குனர் அறிவுரைகள்!

DATA TRANSFER என்ற OPTION கிளிக் செய்து தங்கள் பள்ளியிலிருந்து மாறுதல் சென்றவர்களை, அவர்கள் தற்போது பணியாற்றும் பள்ளிக்கு அவர்களது விவரங்களை மாற்றிக் கொள்ளவும். அதே போன்று தங்கள் பள்ளிக்கு வேறு பள்ளியிலிருந்து பணியாளா்கள் மாறுதல் பெற்று வந்திருந்தால், அவா்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிக்கு தெரிவித்து அவா்களுடைய விவரங்களை மாற்றி கொள்ளவும் . ஒவ்வொரு பணியாளரின் விவரங்களையும் UPDATE செய்யவும்.

August 30, 2014

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி"
என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளதால், 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களும் அனைத்து DEEO / AEEO அலுவலகங்களும் அலுவல் நாட்களாக செயல்பட இயக்குநர் உத்தரவு